districts

img

மெண்டர் பிரிண்டிங் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

காஞ்சிபுரம், நவ.4 - காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை சிப்காட் வளாகத்தில்  இயங்கி வரும் மெண்டர் பிரிண்டிங் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவன தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில்  ஈடுபட்டுள்ள னர். நிர்வாகத்தின் சட்ட விரோத செயல்களை தடுக்க வேண்டும். தொழிற்சங்கம் வைத்த 63 பேர் பணிநீக்கம் செய்ததை திரும்ப பெறவேண்டும்.  தொழி லாளர் துறை உத்தரவுகளை 33 (2) b, 10-B ஆகியவற்றை அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 14 ஆண்டுகளாக சட்டத்தை மதிக்காத நிர்வாகத்தின் மீது நட ’வடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மெண்டார் பிரிண்டிங் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் தொழிலாளர்கள், திங்களன்று (நவ.4) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும் தலையிட வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தை சிஐடியு மாநில செயலாளர் இ.முத்துக்குமார் துவக்கி வைத்து பேசினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர்,  சிஐடியு மாவட்டத் தலைவர் டி.ஸ்ரீதர், மாவட்ட நிர்வாகிகள் ஜெ ஜெனிட்டன், ஆர்.சௌந்தரி கே.ஜீவா ஆகியோர் உரை யாற்றினர்.  சங்கத்தின் தலைவர் எஸ்.ஷாம், செயலாளர் வி.விஸ்வநாதன், நிர்வாகிகள் டி.நடேசன்,  எஸ்.சிவகுமார்,  டி.கார்த்திக், பி.அண்ணாதுரை உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.