மாவட்டத்தில் போலுப்பள்ளியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டது. இதனால் கிருஷ்ணகிரியில் இயங்கி வந்த அரசு தலைமை மருத்துவமனை ஓசூர் மாநகரத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது ஓசூர் ராயக்கோட்டை சாலையில் ரூ. 100 கோடியில் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை கிருஷ்ணகிரி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் தருமர், ஓசூர் அரசு தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவர் ஞான மீனாட்சி அலுவலக ஊழியர்கள் மற்றும் பொறியாளர் சென்று பார்வையிட்டனர்.