மாவீரன் பகத்சிங் 115ஆவது பிறந்த நாளையொட்டி வட சென்னை மாவட்டம் திருவொற்றியூர் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்டத் தலைவர் ஜி.நித்தியராஜ், மாவட்ட செயலாளர் எல்.பி.சரவணத்தமிழன், பகுதி தலைவர் எஸ்.சேகுவேரா, செயலாளர் ஆர்.ஸ்டாலின், பொருளாளர் ஆர்.தமிழ்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.