districts

img

மாமல்லபுரம் கோவில்களை மின்னொளியில் பார்க்கலாம்

மாமல்லபுரம்ஜூலை 16-

    மாமல்லபுரம் சுற்றுலாத தலத்திதற்கு  நாள்தோறும் தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர்   வந்து செல்கின்றனர்.  அவர்கள் இங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்சுணன்தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட இடங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    புராதன சின்னங்களை மின்னொளியில் இரவிலும் பார்வையிட ஏற்பாடு செய்யவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து சனிக்கிழமை  முதல் புராதன சின்னங்களை இரவில் மின்னொளியில் ரசிக்கலாம் என்று தொல்லியல் துறை யினர் அறிவித்து இருந்தனர். இரவு 9மணி வரை அலங்கார மின்னொளியுடன், புராதன சின்னங்கள் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.  

   இதைத்தொடர்ந்து  சனிக்கிழமை  இரவு புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்சுணன்தபசு, வெண்ணை உருண்டை பாறை பகுதிகளை மின்னொளியில் ரசிக்கலாம் என எதிர் பார்த்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வந்தனர். ஆனால் கடற்கரை கோவிலை மட்டும் மின்னொளியில் சுற்றுலா பயணிகள் ரசிக்க அனுமதி வழங்கப்பட்டது. மற்ற இடங்களில் மின்னொளி ஏற்பாடுகள் செய்யப் பட வில்லை. பாதுகாப்பு மற்றும் பரா மரிப்பு பணிகளுக்கான ஆட்கள் பற்றாக்குறை காரணமாக மத்திய தொல்லியல்துறை கடற்கரை கோவிலை மட்டும் முதல் கட்டமாக மின்னொளியில் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி அளித்து உள்ளதாக தெரிகிறது. வரும் நாட்களில் மற்ற இடங்களும் மின்னொளியில் ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். புராதன சின்னங்களில் இரவு மின்னொளி காட்சியை அறிந்து விடுதிகளில் தங்கியிருந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் மாலையில் கடற்கரை கோவில் வளாகத்தில் திரண்டு இருந்தனர். உள்நாட்டவர்களுக்கு ரூ.40, வெளிநாட்டவர்களுக்கு- ரூ.600-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இரவு 9மணிவரை ஏராளமான சுற்றுலா பயணிகள் மின்னொளியில் கடற்கரை கோவிலை பார்த்து ரசித்தனர். செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, கடற்கரைகோவில் போல் ஐந்துரதம், அர்சுணன்தபசு, வெண்ணை உருண்டை பாறை பகுதிகளும் மின்னொளியில் காட்சி யளித்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்றனர்.