districts

img

புலியூர் பகுதியில் தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள்

கிருஷ்ணகிரி, மே 31- கிருஷ்ணகிரி மாவட்டம், புலியூரில் இருந்து ஊத்தங்கரை செல்லும் சாலையில் 2 ஆண்டுகளுக்கு மேலாக பல மின்கம்பங்கள் எப்போது வேண்டு மானாலும் விழும் எனும் நிலையில் உடைந்து எலும்புக்கூடாக காட்சிய ளிக்கிறது. மேலும், போக்கு வரத்து மிகுந்த சாலையில் மின் கம்பிகள் தாழ்வாக தொங்குகின்றன. ஆனால் வழக்கமாக செல்லும் லாரிகள் அந்த இடத்தை கடந்து செல்ல குச்சியை பயன்படுத்தி மின் கம்பிகளை தூக்கிப்பிடித்து கடந்து செல்கின்றன.  புதிதாகவும்,இரவு நேரத்திலும் வரும் வாக னங்களுக்கு மின்கம்பி தாழ்வாக செல்வது தெரி யாத நிலை உள்ளதால் மின்கம்பியில் சிக்கி விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது.  எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு மின்வாரியம் நடவடிக்கை எடுத்து பழுதான மின்கம்பங்களை மாற்றவும் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்து கொடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.