districts

கலப்பட டீசலுடன் லாரி பிடிபட்டது

சென்னை,ஜூலை 11-

    செங்குன்றம் தியம்மாக்கம் பகுதியில் கலப்பட டீசல் லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிவில் சப்ளை உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி 12 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலுடன் லாரியை பிடித்தனர். இது தொடர்பாக வியாசர்பாடியை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். லாரி உரிமையாளரான நிக்சனை போலீசார் தேடி வருகின்றனர். இதுபோன்று புழல் காவாங்கரை தண்டல் காலனியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9500கிலோ ரேசன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.