districts

கொப்பரைக் கொள்முதல் உச்சவரபை உயர்த்த கடிதம்

சென்னை, ஜூலை 10-

     நடப்பாண்டில் கொப்பரை தேங்காய் கொள்முதல் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ஆதரவு விலை திட்டத்தின் கீழ் நடப்பாண்டில், தமிழ்நாடு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்திற்குள் 47,513 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்துள்ளது. 2019-ல் கொப்பரை கொள்முதல் தொடங்கப்பட்டாலும் சந்தை விலை அதிகமாக இருந்ததால் கொள்முதல் குறைவாகவே இருந்தது.

    2022 முதல் உற்பத்தி அதிகமானதால் தேங்காய், சந்தை விலையில் குவிண்டாலுக்கு ரூ.2,500-லிருந்து ரூ.1,500-ஆகவும் கொப்பரை சந்தை விலையில்  குவிண்டாலுக்கு 11,500-லிருந்து ரூ.8,100-ஆகவும் குறைந்தது. இதன் காரண மாக பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் கொப்பரைக் கொள்முதல் அதிகரித்துள்ளது.

   தமிழ்நாடு அரசு மூன்று மாத காலத்திற்குள் 56,000 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ண யித்து இருந்தது. அதனை தற்போது எட்டியுள்ள நிலையி லும், விவசாயிகளிடம் அதிகளவு கொப்பரை கையிருப்பு  இருப்பதாலும், சந்தையில் விலை தொடர்ந்து குறை வாக இருக்கிறது. கொப்பரை கொள்முதல் செய்யும்  உச்சவரம்பை 20 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக  உயர்த்த வேண்டும்.  தமிழ்நாட்டிற்கான கொள்முதல் இலக்கை 56,000 மெட்ரிக் டன்னிலிருந்து 90,000 மெட்ரிக்  டன்னாக உயர்த்த வேண்டும். இது சந்தையில் விலையை  நிலைப்படுத்த உதவுவதோடு தென்னை விவசாயிகளுக்கும் நன்மை பயக்கும்.

    எண்ணெய் வித்துக்கள் உற்பத்திலும் பரப்பளவில் மூன்றாவது இடமாகவும், தென்னை உற்பத்தியில் தேசிய  அளவில் மூன்றாவது இடத்திலும் தமிழ்நாடு இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

;