districts

img

வணிகவியல் மாணவர்களுக்கு செயலி வழியாக பாடங்கள்

சென்னை,டிச. 14- சிஏ படிக்க விரும்பும்  வணிகவியல் மாணவர்க ளுக்கான பாடத்திட்டங் கள் அடங்கிய செயலி சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. பட்டய கணக்காயரான கோகுல்ராஜ் ஆக்ஸஸ் லேர்ன் (AXUS LEARN) என்ற  பெயரில் இந்த புதிய  செயலியை  உருவாக்கியுள்ளார்.  சென்னையில் கடந்த 13 ஆம் தேதி பெரம்பூரில் உள்ள எஸ்.கே.என்.எஸ். பிஎம்சி விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் கல்லூரியியில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பள்ளியின் முன்னாள் மாணவர் கோகுல் ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது . பள்ளியின் முதல்வர் சுஜாதா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர்கள் சங்க துணைச் செயலாளர்  ஸ்ரீராம் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். பொருளாதாரம் முதல் வர்த்தக கணிதம் வரை பல்வேறு பாடங்கள் இந்த செயலியில உள்ளன. வணிகவியல் மாணவர்களுக்கு தேவையான கல்வி சார்ந்த பல தகவல்கள் இதில் கிடைக்கும். மிகச்சிறந்த ஆசிரியர்களின் பாடங்கள் வீடியோ வடிவில் தரப்பட்டுள்ளன. நிபுணர்களின் ஆலோசனைகள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன.