districts

பெருங்களத்தூர், திரு வள்ளுவர் நகர், 3-வது குறு க்குத்தெருவை சேர்ந்தவர் கிருத்திகா ரயில் மோதி மாணவி பலி

வண்டலூர்,மே 11-  பெருங்களத்தூர், திரு வள்ளுவர் நகர், 3-வது குறு க்குத்தெருவை சேர்ந்தவர் கிருத்திகா (வயது20). இவர் பொத்தேரியில் உள்ள தனி யார் கல்லூரியில் படித்து வந்தார். புதனன்று மாலை  அவர் கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக பொத்தேரி ரயில் நிலை யத்துக்கு வந்தார். அப்போது அவர் அங்குள்ள நடை மேடை மேம்பால படிக் கட்டை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது, சென்னையில் இருந்துசென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் மாணவி மீது உரசியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணவி சம்பவ இடத்திலேயே  இறந்தார்.