districts

img

கழிவுநீரால் சூழப்பட்டகழிவுநீரால் சூழப்பட்ட கருணாநிதி நகர் நோய் பரவும் அபாயம் கருணாநிதி நகர் நோய் பரவும் அபாயம்

மணலி, டிச.  5- சென்னை மாநகராட்சி மணலி மண்டலம் 2க்கு உட்பட்ட 18ஆவது வார்டில் உள்ளது கலைஞர் கருணாநிதி நகர். இங்கு 6 தெருக்கள் உள்ளன. 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் தினக் கூலிக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள். இந்நிலையில் தற்போது பெய்த மழை யால் குடியிருப்பு பகுதியில் கடந்த 20 நாட்க ளுக்கும் மேலாக குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தாழ்வான வீடுகளுக்கும் தண்ணீர் புகுந்துள்ளது. தற்போது குப்பைக் கழிவுகளும், கழிவு நீரும் சேர்ந்து, அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகிறது. அந்த தண்ணீரில் நடந்து சென்றால் கால்களில் அரிப்பு ஏற்படுவதாகவும், மேலும் பல்வேறு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தற்போது டெங்கு உள்ளிட்ட பல்வேறு வைரஸ் காய்ச்சல் ஏற்படும் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குடி யிருப்பு பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரை அப்புறப்படுத்தவும், முறையாக மழைநீர் வடிகால்வாய் அமைத்து மழைநீர் தேங்காமல் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;