districts

img

காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியில்  இந்தியா கூட்டணி சார்பில் போட்டி

காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியில்  இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.செல்வத்தை ஆதரித்து இடதுசாரி கட்சிகளின் சார்பில் புதனன்று ( மார்ச் 27) ஊரப்பாக்கத்தில் துவங்கி சிங்கப்பெருமாள் கோயில் வரை பிரச்சாரம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ, சிபிஎம்எல்(விடுதலை), பாட்டாளி வர்க்க சமரன் அணி ஆகிய கட்சிகளின் சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் ப.சு.பாரதி அண்ணா, ராஜ்குமார், இரணியப்பன், கார்த்திகேயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் க.சேஷாத்திரி, மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.சண்முகம், குணசேகரன் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.