சென்னை,செப். 8- சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலை யில் விரிவான புற்றுநோய் சிகிச்சை மையத்தை எம்ஜி எம் ஹெல்த்கேர் தொடங்கி யுள்ளது. இதுகுறித்து அதன் இயக்குநர் டாக்டர் பிரசாந்த் ராஜகோபாலன் செய்தியாளர்களிடம் பேசு கையில், “புற்றுநோய் குறித்த அச்சத்தை அனை வரின் மனதிலும் இருந்து விலக்கினால் உலகம் சிறந் ததாக இருக்கும் என்றார். புற்றுநோயின் நிகழ்வுகள் ஆபத்தான வேகத்தில் வளரும்போது, அதோடு நம்பிக்கையும் தைரியமும் வேகமாக வளர வேண்டும். எங்களுடைய நிபுணத்து வம், தொழில்நுட்பம், நேர் மறைத்தன்மை, நம்பிக்கை யின் கதைகள் மூலமாக புற்றுநோயால் பாதிக் கப்பட்ட நோயளிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை விரைந்து குண மடைய செய்ய முயற்சிப் போம் என்றார். புற்றுநோ யின் கோரப்பிடியில் இருந்து உலகை விடுவிக்க பணியாற்றப்போவதாகவும் அவர் கூறினார். 150 படுக்கைகள் வசதி கொண்ட எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் தனித்துவ மானது மட்டுமல்ல டாக்டர் ராஜா தலைமையிலான குழுவால் வழிநடத்தப்படும் மிகவும் தகுதி வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் களை உள்ளடக்கிய மைய மும் ஆகும் என்றும் ராஜ கோபாலன் தெரிவித்தார்.