districts

புதிய தொழில்நுட்பத்தில் மெத்தைகள் அறிமுகம்

சென்னை, ஜூன் 9- கோவை சேர்ந்த ரிபோஸ் மெத்தை நிறுவனம்  ஸ்மார்ட் கிரிட் மெத்தை களை அறிமுகம் செய்துள்ளது. இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவமான டிஆர்டிஓ  உருவாக்கிய தொழில்நுட்பத்தில் அடிப்படையில் இந்த மெத்தைகளை உருவாக்கியுள்ளதாக நிறுவனத்தின் தலைமை விற்பனை அலுவலரான  பாலாஜி கூறினார். ஒரு மனிதன் நன்றாக தூங்கினால்  தான் உடல் ஆரோக்கியமாக இருப்பபதற்கான புத்துணர்ச்சி கிடைக்கும்.  முழு தூக்கம்  நிறைவுபெற்றால்தான் புதிய சிந்தனை பிறக்கும். குறைவான  தூக்கம் உடலை கொடுத்து விடும்.எனவே  புதிய தொழில்நுட்பத்திலான இந்த மெத்தை மக்களுக்கு பெரிதும் பயன்படும் என்றார். தமிழகத்தில் தங்களது விற்பனையை ரூ30கோடியில் இருந்து ரூ.60  கோடியாக உயர்த்தவும் ஒட்டுமொத்த விற்று முதலை ரூ.200 கோடியாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் விற்பனை  பிரிவு துணைத்தலைவர் ரவி பண்டிட்கூறினார்.