districts

img

உடனடியாக சமைக்க உதவும் கோழி இறைச்சி அறிமுகம்

சென்னை, மே 18- உணவகங்களில் கிடைப் பது போன்ற சுவையுடன் வீட்டிலேயே சமைக்க ஏதுவாக  ரெடி-டு-குக் பொருட்களை கோத்ரேஜ் டைசன் ஃபுட்ஸ்    நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கோத்ரேஜ் யம்மீஸ்,  யம்மீஸ் கிரிஸ்பி ஃபிரைடு சிக்கன்  என இந்த தயாரிப்புகள் 5 முதல் 7 நிமிடங்களில் வீட்டிலேயே தயாரிக்க முடியும். தரமான எலும்பில்லாத கோழியிலிருந்து இவை தயாரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நுகர்வோர் இது போன்ற ஃபிரைடு சிக்கன் வகைகளை  வீட்டில் சமைக்கும் போது எதிர்பார்த்த சுவை கிடைப்பதில்லை என்பதால் கடைகளில் வாங்கி உண்பதையே விரும்புகின்றனர். இந்த தேவையை கருத்தில் கொண்டு கோத்ரேஜ் நிறுவனம்  உணவகங்களில் கிடைப்பது போன்ற சுவையுடன்  வீட்டிலேயே சமைக்கும் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சிக்கன் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

;