திருவள்ளூர், ஆக.19- தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்த படி 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர் அனைவருக்கும் 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத் தின் திருவள்ளூர் மாவட்ட மாநாடு வலியுறுத் தியுள்ளது. சனிக்கிழமையன்று (ஆக.19) திருவள்ளூ ரில் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் கோ.இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ராமமூர்த்தி கொடியேற்றினார். மாவட்ட துணைத் தலைவர் எம்.எஸ்.வினாயகம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.மாவட்ட துணைத் தலைவர் து.மகேந்திரன் வரவேற்றார்.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.காந்திமதிநாதன் துவக்க வுரையாற்றினார்.மாவட்ட செயலாளர் ஆர்.ஜெயராமன் வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் கு.கன்னியப்பன் வரவு, செலவு சமர்ப்பித்தனர். மாவட்ட நிர்வாகிகள் வேதா தனபாலன், குப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் த.குப்பன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.டி.எம்.கிருஷ்ணன் நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள் மாவட்ட தலைவராக கோ.இளங்கோ வன் செயலாளராக ஆர்.ஜெயராமன், பொருளாளராக கு.கன்னியப்பன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழி யர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7850 ஓய்வூதி யம் வழங்க வேண்டும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஓய்வூதியர்களுக்கு பரிசோதனைகள் உட்பட இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.