districts

img

தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவன தரவு மையம் சென்னையில் துவக்கம்

சென்னை, ஜூலை 2-

   சர்வதேச தகவல் தொழில்நுட்ப  உள்கட்ட மைப்பு மற்றும் சேவை நிறுவனமான என்டிடி லிமிடெட் சென்னை அம்பத்தூரில் உள்ள அதன் தரவு மைய வளாகத்தில்  300 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடு செய்ய உள்ளது.

   ஜப்பானைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம் சென்னை அம்பத்தூரில் ‘சென்னை 2’ வளாகத்தை திறந்துள்ளது. இந்த வளாகம்  கடலுக்கடியில் செல்லும் எம்ஐஎஸ்டி  கேபிளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது என்டிடி  குழுமத்தின் முதல் கேபிள் அமைப்பாகும். இது இந்தியாவிற்கு அல்லது இந்தியாவிலிருந்து நேரடி இணைப்பை வழங்குகிறது. எம்ஐஎஸ்டி ஆனது 12-ஃபைபர் ஜோடி திறன் கொண்ட முதல் கேபிள் அமைப்பாகும் - இந்தியாவில் வினாடிக்கு 200 டெராபைட் வேகத்தில்  தரவுகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது என்று அந் நிறு வனத்தின் மேலாண் இயக்குநர் சரத் சங்கி தெரிவித்தார்.

   தரவு மைய வளாகம் 6 ஏக்கர் பரப்பள வில் அமைந்துள்ளது. இரண்டு தரவு மைய கட்டிடங்களில் இருந்து சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் 34.8 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.  இதில் 17.4 மெகாவாட் மின்சாரம் முதல் கட்டமாக கிடைக்கிறது என்றும் அவர் கூறினார். சென்னையில் 2வது தரவு மைய வளாகம் தொடங்கப்பட்டதன் மூலம், நாட்டில் என்டிடியின் தரவு மைய தடம் 3.1 மில்லியன் சதுர அடிக ளாக அதிகரித்துள்ளது.  இந்திய நக ரங்களில் முதன்மை தகவல் தொழில் நுட்ப உள்கட்டமைப்பு கொண்ட நிறு வனங்களுக்கான பேரிடர் மீட்பு (டிஆர்) தளமாக சென்னையை என்டிடி நிலைநிறுத்தவுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி சேகர் சர்மா கூறி னார்.

   மூன்றாவதாக, சிங்கப்பூர் போன்ற தென்கிழக்கு ஆசியாவில் திறன் குறை வாக உள்ள சந்தைகளுக்கு தரவு மைய திறனை வழங்கவும் சென்னை மையம் பயன்படும் என்றும் அவர் மேலும் தெரி வித்தார்.