திருவள்ளூர், ஜூலை 19-
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஏரியான பூண்டிக்கு கடந்த 2 மாதத்தில் 2 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வந்து உள்ளது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கன அடி. இதில் தற்போது 2082 மி.கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 64 விழுக்காடு ஆகும். தொடர்ந்து பூண்டி ஏரிக்கு 280 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.