districts

img

சிறுவன் கோகுல் ஸ்ரீ இல்லத் திறப்பு விழா

சென்னை, ஆக. 20 -

      சிறுவன் கோகுல் ஸ்ரீ இல்லத் திறப்பு விழா  ஞாயிறன்று (ஆக.20) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா தலை மையில் நடைபெற்றது.

      தாம்பரம் கன்னட பாளையத்தில் குப்பை மேட்டையொட்டி தனது 6 குழந்தைகளுடன் பிரியா வசித்து வந்தார். அவரது மகன் கோகுல் ஸ்ரீ,  செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் சித்திரவதை செய்யப்பட்டு 2022 டிச 31 அன்று 96 கொடுங்காயங்க ளுடன் கொல்லப்பட்டார். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காவல் சித்திரவதைக்கு எதி ரான கூட்டியக்கம், மக்கள்  கண்காணிப்பகம் அமைப்பு கள் இணைந்து தொடர் போராட்டம் நடத்தின.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் நேரடியாக சென்று பிரி யாவை சந்தித்து, முதல மைச்சருக்கு கடிதம் எழுதினார். கனிமொழி எம்.பி., சட்டமன்ற உறுப்பி னர்கள் ஜவாஹிருல்லா, ஆளூர் ஷாநவாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பிரியா வுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.

   இதனையடுத்து தமிழ்நாடு அரசு, பிரியா குடும்பத்திற்கு ரூ10 லட்சம் நிவாரணம் வழங்கியது. தாம்பரம் அஞ்சுகம் நகரில்  கட்டப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடி யிருப்பில் ஒரு வீட்டையும் ஒதுக்கீடு செய்தது. அந்த  இல்லத்திற்கு ‘கோகுல்ஸ்ரீ  வீடு’ என பெயரிடப்பட் டுள்ளது.

    இந்த இல்லத் திறப்பு  நிகழ்வில் மக்கள் கண்காணிப்பகம் இயக்குநர் ஹென்றி திபேன், இ.ஆசீர், காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் ஒருங்கிணைப்பாளர் தியாகு, செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ம.பா.நந்தன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் சி.இ.மல்லை சத்யா, மாவட்டச் செயலா ளர் மாவை. மகேந்திரன், சிபிஎம் தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செங்கல்பட்டு மாவட்டச்  செயலாளர் ஜி.புருஷோத் தமன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் க.ெஜயந்தி, தோழமை அமைப்பின் இயக்குநர் தேவநேயன், மக்கள் மன்ற  நிர்வாகி மகேஷ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

;