districts

img

திருவண்ணாமலையில் ஆயுஷ் மருத்துவமனை திறப்பு

திருவண்ணாமலை, ஆக.22-

        திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவ மனை வளாகத்தில் ரூ. 6 கோடியே 75 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 50 படுக்கை கள் கொண்ட ஒருங்கி ணைந்த ஆயுஷ் மருத்துவ மனையை தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக்காட்சி வாயி லாக  திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து திரு வண்ணாமலையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் பார்வையிட்டார்.

    தமிழ்நாடு மாநில ஆயுஷ் குழுமத்தின் 2016-2017 ஆண்டிற்கான மாநில செயல் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலையில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவ மனை அமைக்க தேசிய ஆயுஷ் திட்ட இயக்கதால் அனுமதி வழங்கப்பட்டு அதற்கான நிர்வாக ஒப்புதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் 29460 சதுர அடி பரப்பில் தரை மற்றும் மூன்றுதளங்களுடன் கூடிய இம்மருத்துவமனையில் ஆயுஷ் துறைகளான சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவ புற நோயாளிகள் பிரிவும், 50 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவும் செவ்வாய் முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

    இங்கு அனைத்து வித மான நோய்களுக்கும் உள்மருந்து, புற மருத்துவ சிகிச்சைகளான சித்த வர்ம சிகிச்சை, தொக்கணம் நீரா விக்குளியல், சுட்டிகை, ஒற்றடம் போன்ற சித்த மருத்துவத்தின் 32 வகை யான புற மருத்துவ சிகிச்சை களும் மற்றும்  நீர் சிகிச்சை, வாழை இலை குளியல், மண் குளியல், அக்குபஞ்சர், இயன்முறை சிகிச்சை போன்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது. மேலும் நாள்பட்ட நோய்களுக்கு உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தொகுதி யின் மக்களவை உறுப்பி னர் சி.என்.அண்ணாதுரை, மாநில தடகள சங்க துணை தலைவர் மரு. எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி முத ல்வர் மரு.அரவிந்தன், இணை இயக்குநர் (சுகா தாரபணிகள்) மரு.செல்வ குமார், மாவட்ட சித்தா மருத்துவர் (பொறுப்பு) மரு.கார்த்திகேயன்,  திரு வண்ணாமலை ஒன்றிய குழுத்தலைவர் கலைவாணி கலைமணி, மருத்துவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அலு வலர்கள் கலந்து கொண்ட னர்.