districts

img

மக்களைத் தேடி மருத்துவ திட்ட ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்

ராணிப்பேட்டை செப்.5- மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில் ராணிப் பேட்டை, கடலூர் மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் நடத்தி னர். தமிழ்நாடு அரசின் மக்க ளைத்தேடி மருத்துவத் திட்டத்தில் தன்னார்வலர்கள் என்ற முறையில் மாநிலம் முழுவதும் சுமார் 11 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டு இத்திட்டதை அரசு சிறப்பாக செயல்படுத்தி வரு கிறது. இதில் பணியாற்றும் தன்னார்வ ஊழியர்கள் மிகப்பெரிய பங்களிப்பு செய்து அரசுக்கு நற் பெயரை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.  2 மணி நேர பணிக்கு 4500 ரூபாய் ஊக்கத் தொகை என்று கூறினாலும் தங்களுடைய பணிகள் வீடு வீடாக சென்று மருந்து வழங்குவது, ரத்த அழுத்தம், நீரழிவு நோய் கண்டறிதல், தொற்ற நோய்கள் கண்டறிதலாகும். இந்த பணிகள்அனைத்தும் ஆன்லைன் பதிவுசெய்து முகாம்களில் முழுநேரமாக பணியாற்றுவது உள்ளிட்ட பணிகளையும் திறம்பட செய்து வருகிறோம். எனவே, தமிழக அரசு எங்களை ஊழியர்களாக அங்கீகரித்து எங்களது வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக காலத்திற் கேற்ற ஊதிய உயர்வை வழங்க வேண்டும், பணி நேரத்தை நிர்ணயம் செய் முழு நேர ஊழியராக்க வேண்டும்.  அனைவருக்கும் அடை யாள அட்டை கொடுக்க வேண்டும், ஊதியத்தை காலதாமதப்படுத்தாமல் வங்கிக்கணக்கில் நேரடி யாக செலுத்த வேண்டும். பணி நேரத்திற்கு போக்கு வரத்துப்படி , உணவுப்படி வழங்க வேண்டும் ஊழி யர்களின் பேறுக்கால சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் வலி யுறுத்தியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் எம். வேதசவுந்தரி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். கடலூரில் கடலூர் மாவட்டத்தில் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் சரிதா தலைமை தாங்கியில் கோரிக்கை மனு அளித்தனர்.  சிஐடியு மாவட்டத் தலை வர் பி.கருப்பையன், மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், மாநிலக் குழு உறுப்பினர் வி. கிருஷ்ண மூர்த்தி மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் b ஜயசுதா, ஆனந்தி, வச்சலா , தமிழ் இன்பம்  உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.