districts

img

சிதம்பரத்தில் இடவசதியில்லாத நூலகம்: அவதிப்படும் மாணவர்கள்

சிதம்பரம்,மே 13- “நூலகம்  இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்” என அறிவுசார் மக்கள் கூறுகின்ற னர்.  நூலகத்தில் அறிவை வளர்க்கக்கூடிய பலதரப்பட்ட தக வல்களை நாம் அறிந்து கொள்ள லாம். நமது ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் விஷயங்களும் அங்குக் கிடைக்கும். மேலும், நமது மொழி வளத்தைப் பெருக்குவதற்கும் வாசிப்பைச் சரளமாக்குவதற்கும் நூலகம் முக்கிய பங்காற்றுகிறது. “நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்று ஒளவையார் கூறியுள்ளார். அது சரி விசயத்திற்கு வருவோம். சிதம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்த நூலகத்தில் இடவசதியின்றி அறிவுக்கு ஏங்கும் மாணவர்கள் அவதியின் உச்சத்தில் அல்லாடி வருகின்றனர்.   சிதம்பரம் நகரத்தில் கடந்த 1955 ஆம் ஆண்டு காசுக்கடை தெருவில் தனியார் கட்டிடத்தில் சிதம்பரம் கிளை நூலகம் தொடங்கப்பட்டது.  பின்னர் 2007 ஆம் ஆண்டு முதல் சின்ன காஜா தெருவில் உள்ள தனி யார் கட்டிடத்தில் இயங்கியது. இந்த நிலையில் நகராட்சி அலு வலகத்திற்கு எதிரே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நூலகம் கட்ட அனுமதிக்கப்பட்டதால் ரூ 48 லட்சம் செலவில் கீழ்தளம் 1800 சதுர அடியில் நூலக கட்டிடம் அமைக்கப்பட்டது.  இதனை கடந்த ஜனவரி 5ஆம் தேதி தமிழக முதல்வர் திறந்து வைத்தார். இதில் தற்போது நூலகம் செயல்பட்டு வரு கிறது.  இந்த நூலகத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளது தற்போதைய புதிய நூலக கட்டிடம் அதற்கு ஏற்ற வகை யில் இட வசதி இல்லாததால் பல்லா யிரக்கணக்கான நூல்கள் கட்டு கட்டாக கட்டி பயனற்ற நிலையில் கட்டிடத்தின் லாப்ட் மற்றும் தற்காலிக இரும்பு தகர கொட்டகையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நூலக தளம் முழுவதும் வெறும் புத்தக ரேக்கு கள் புத்தகங்கள் உள்ளதால் நூல கத்திற்கு வரும் நூலக பயனாளர்கள் அமர்ந்து படிப்பதற்கு சரியான இடம் இல்லை.  இதில் அரசு தேர்வுக்கு தயாராகும் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்வேறு கிராம, மற்றும் நகரப் பகுதிகளில் இருந்து வந்து  அரசு தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள்.  இவர்கள் அமர்ந்து படிப்பதற்கு இட வசதி இல்லை. நூலக முகப்பு நூலகர்  அருள் சிதம்பரம் நகரத்தில்  சமூக ஆர்வலர்களை அணுகி தற்காலிக இரும்பு தகர கொட்டகை அமைத்து அதில் மாணவர்களுக்கு உட்கார்ந்து படிப்பதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளார்.   மேலும் நூலகத்திற்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு  பெயர் சொல்லாத கொடையாளர் ஒருவர்  ரூ 2.5 லட்சம் செலவில் சிமெண்ட் சீட் கொட்டகை அமைத்து நூலகத்திற்கு வருவோருக்கு வாகனங்கள் நிறுத்தும் இடத்தை எடுத்துக் கொடுத்தார். இதேபோல் பல்வேறு தரப்பினர் சிதம்பரம் நூலகத்திற்கு உதவி செய்து வருகிறார்கள்.  இந்த நிலையில் சிதம்பரம் நூலகத்தில் உடனடியாக மேல் தளம் அமைக்க வேண்டும் என அனைவரும் கோரிக்கை விடுத்து வரு கின்றனர். இதனை தமிழக முதல்வர் தனிக் கவனம் செலுத்தி சிதம்பரம் நூலக கட்டிடத்தின் மீது முதல் மற்றும் இரண்டாம் தளம் அமைத்து அதில் தற்போது உள்ள மின்னணு தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில் அனைத்து விதமான புத்தகங்கள் வாசிப்பதற்கு, அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாண வர்கள் பயன்பெறும் வகையில் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அழியா அறிவுச்செல்வம் புத்தகங்கள் அடுக்க இடமின்றி இருப்பது குறித்து குறித்து மாவட்ட நூலக அலுவலர் சக்திவேலிடம் கேட்டபோது சிதம்பரம் நூலக கட்டி டத்தில் முதல் தளம் அமைக்க அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம் அனுமதி வந்தவுடன் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சி பகுதிகளில் புதிய 29 நூலகங்கள் கட்டு வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். ஆட்சி யாளர்களும் அதிகாரிகளும் முயற்சித்தால் பிரச்சனை இலகுவாக தீரும் என்பதில் ஐயமில்லை... - அ.காளிதாஸ்