districts

img

புதுச்சேரியில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி

மகாத்மா காந்தியின் 154ஆவது பிறந்தநாளையொட்டி மதச்சார்ப்பற்ற கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணக்க பேரணி புதுச்சேரி அண்ணா சாலையில் ஞாயிறன்று (அக். 2) நடைபெற்றது. இதில் சட்டம்ன்ற எதிர்கட்சி தலைவர் ஆர்.சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், காங்கிரஸ் பிரதேச தலைவர் ஏ.வி.சுப்பரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், சிபிஐ மாநிலச் செயலாளர் அ.மு.சலீம், விசிக மாநிலச் செயலாளர் தேவ.பொழிலன், மதிமுக தலைவர் கபிரியேல், மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலசுப்புரமணியன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் உமர்பாரூக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.