இந்திய உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு வேலூர் நறுவீ மருத்துவமனையில் மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமையில் உடல் உறுப்பு தானம் வழங்குவது பற்றிய உறுதிமொழி எடுத்து கொண்டனர். மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத். செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், பொது மேலாளர் நிதின் சம்பத், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.