districts

img

விஐடி விசுவநாதனுக்கு அமெரிக்காவில் கவுரவ டாக்டர் பட்டம்

வேலூர், மே 14 - வேலூர் விஐடி பல்கலைக்கழக நிறு வனர்  மற்றும் வேந்தர் டாக்டர்.  கோ. விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாநில பல்கலைக்கழகம்  (பிங்ஹாம்டன் பல்கலைகழகம்) கவுரவ  டாக்டர் பட்டம் வழங்கியது.  சர்வதேச அளவில் உயர்கல்வியின்  வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும்  வகையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம், விஐடிவேந்தர் கோ.விசுவநாதனுக்கு பிங்ஹாம்டன் பல்கலைகழத்தின் வேந்தர் ஹார்வி  ஸ்டிங்கர் டாக்டர் பட்டம் வழங்கி னார். பின்னர் அவர் பேசுகையில் இந்தியா வில்  உயர் கல்விக்கான பாதையை உலகள வில்  விரிவுபடுத்தலிலும் மற்றும் உலகள வில்  தலை சிறந்த கல்வி நிறுவனங்களுடன்  இணைந்து பணியாற்றுவதிலும்  முன்னோடியாக இருந்து வருகிறார் எனக் கூறினார். இதில் விஐடி துணைத்தலைவர்கள்  சங்கர் விசுவநாதன், டாக்டர் சேகர்  விசுவ நாதன்,  டாக்டர்.ஜி.வி.செல்வம், உதவி துணைத்தலைவர் காதம்பரி ச.விசுவநாதன் மற்றும் விஐடி  சர்வதேச உறவுகள் துறை இயக்குநர்  ஸ்ரீநிவாசன் ஆகியோர்  கலந்துகொண்டனர். முன்னதாக கடந்த 2009 ஆம் ஆண்டு  அமெரிக்காவில் உள்ள வெஸ்ட்  வெர்ஜினியா பல்கலைக்கழகம் விஸ்வ நாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது  குறிப்பிடத்தக்கது.