districts

img

கடலூர் மாவட்ட திருட்டு வழக்கில் மீட்கப்பட்ட பொருள்கள் ஒப்படைப்பு

கடலூர், மே 29-

    கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் பல்வேறு வழக்கு களில் மீட்கப்பட்ட பொருள்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு தலைமை தாங்கினார்.

   இந்த நிகழ்வில், மீட்கப்பட்ட சுமார் ரூ.76 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை உரியவர்களி டம் ஒப்படைத்தார்.மேலும் பணியின்போது சிறப்பாக செயல்பட்ட 35 காவல் துறையினருக்கு பாராட்டு சான்றும் வழங்கினார்.

   பின்னர் அவர் செய்தியாளர்க ளிடம் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் குற்ற வழக்கு களில் கைப்பற்றப்பட்ட 130 சவரன் நகைகள் மற்றும் செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு முத்தாண்டிக் குப்பம் காவல் சரகத்தில் நடை பெற்ற ஆதாயக் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

   சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடத்தப்பட்டது குறித்து சுகா தாரத்துறை அமைச்சரும் செய லாளரும் விளக்கம் அளித்துள்ள னர். அந்த விளக்கமே போது மானது. தமிழ்நாட்டில் காவல் துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப் பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை கேரளா, கர்நாடகம், ஆந்திரா, பாண்டிச் சேரி உள்ளிட்ட மாநில எல்லை களில் மொத்தம் 26 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு ஆயுதம் ஏந்திய காவ லர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

    மரக்காணம் கள்ளச்சாராய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப் பட்டுள்ளது. சைபர் கிரைம் குற்றங்களை பொறுத்தவரை பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து தொடர்பு கொண்டு பொதுமக்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எளிதில் எடுத்து விடுகிறார்கள். எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இதையும் மீறி யாரேனும் பணத்தை இழந்தால் உடனடியாக இது குறித்து 1930 என்ற எண்ணுக்கு புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்

    சிவகங்கை மாவட்டத்தில் ஒரு சைபர் கிரைம் குற்ற வழக்கில் 26,000 சிம் கார்டு கள் மற்றும் ஆயிரம் செல் போன்கள் பறிமுதல் செய்யப் பட்டது. அனைவரும் செல்போனில் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். காவலர் களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கும் திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்து அதற்கு சட்ட வடிவம் கொடுத்துள்ளார். அதன்படி தமிழ கத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுகிறது. தவிர்க்க முடி யாத சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் காலங்களில் மட்டும் அவர்களுக்கு விடுமுறை அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது என்றும் அவர் கூறினார்.