காதலர் தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை மற்றும் பாரதி பூங்காவில் காதலர்களுக்கு மலர் கொத்து, இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். தந்தை பெரியார் திராவிடர் கழகம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக காதலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சாதி, மதம் கடந்த காதலர் தினத்தை போற்றுவோம் என்று முழக்கமிட்டனர்.