districts

img

கேரளா அரசைப் போல் ஆட்டோ செயலியை தமிழ்நாட்டிலும் அரசே துவக்க வேண்டும்

கேரளா அரசைப் போல் ஆட்டோ செயலியை தமிழ்நாட்டிலும் அரசே துவக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே மாவட்டப் பொருளாளர் எம்.ராமு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மு.காசி, ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் டி.முரளி, மாநகர பொறுப்பாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் கிருபாகரன், நந்தகுமார், நாகையா ஆகியோர் பேசினர்.