சென்னை, டிச.16 சென்னையில் சனிக்கிழமை (டிச.18) 200 வார்டுகளில் நடைபெற வுள்ள கோவிட் 19 மெகா தடுப்பூசி சிறப்பு முகாமில் பொதுமக்கள் கோவிட் தடுப்பூசி செலுத்தி பயனடையு மாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.. கொரோனா வைரஸ் தொற்றி லிருந்து பாதுகாத்துக் கொள்ள கோவிட் தடுப்பூசி ஒன்றே சிறந்த தீர்வாக உள்ளது. அதனால் தான் அரசின் சார்பில் பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி விலையில்லாமல் செலுத்தப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதல மைச்சர் அவர்களின் அறிவுறுத்த லின்படி, கோவிட் தடுப்பூசி பொது மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அனை வருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் வார இறுதி நாட்களில் அரசின் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி 1600 தடுப்பூசி முகாம்களுடன் மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வரு கின்றன. இதுவரை நடைபெற்ற 14 மெகா தடுப்பூசி முகாம்களில் 21,96,730 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 87விழுக்காடு முதல் தவணை தடுப்பூசி யும், 63 விழுக்காடு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்து 8,26,471 நபர்கள் உள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியில் தற்பொழுது 5,92,095 கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 18.12.2021 அன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் 1600 கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்கள் மூலம் சுமார் 4 இலட்சம் நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றில் மரபி யல் மாற்றமடைந்த ஒமைக்ரான் வகை தொற்று பரவி வருகிறது. நம்முடைய அண்டை மாநிலங்களிலும் ஒருசில நபர்களுக்கு ஒமைக்ரான வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், னைஜீரியா நாட்டி லிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய ஒரு பயணிக்கு மரபியல் மாற்ற மடைந்த ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதித்தாலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி னால் தீவிர சிகிச்சையின்றி உயிர் பாதுகாப்பு உள்ளது என பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனவே, கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்துள்ள நபர்களும் அலட்சியமாக இல்லாமல் இந்தத் தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக் கொண்டு கோவிட் தடுப்பூசியினை தவறாமல் செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாநகராட்சி செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.