சென்னை திருவல்லிக்கேணி சிவராஜபுரத்தில் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிக்கும் மக்களிடம் பயோ மெட்ரிக் கணக்கெடுப்பு நடத்த அரசு அதிகாரிகள் வந்தனர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதிக்குழு உறுப்பினர் ஆர்.கபாலி தலைமையில் அப்பகுதி மக்கள், அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு தங்கள் வாழ்விட பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு முறையாக அதிகாரிகள் பதிலளிக்கவில்லை. இதனால் மக்கள் அதிகாரிகளை திருப்பி அனுப்பினர்.