districts

சிறுமி கர்ப்பம் வளர்ப்பு தந்தை கைது

கிருஷ்ணகிரி,ஜூலை.2-

   ஓசூர் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.சிறுமியின் தந்தை இறந்து விட்டதால் அவர் தாய், கூலி வேலை செய்யும் 29 வயது சம்பன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சிறுமி மற்றும் அவரது தாயாருடன் சம்பன் வசித்து வந்தார்.  

   இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்ததில் மருத்துவர்கள் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்த போது வளர்ப்பு தந்தை சம்பன் பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக தெரிவித்தார். சிறுமியின் தாய் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரளித்தார். இதையடுத்து சம்பன் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.