சென்னை, டிச. 20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வாவின் தந்தை கோவிந்தன் உடல் நலக் குறைவால் புதனன்று (டிச.20) காலமானார். அவருக்கு வயது 71. வேளச்சேரியில் உள்ள இல்லத்தில் வைக்கப் பட்டிருந்த உடலுக்கு கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பி னர்கள் உ.வாசுகி, பி.சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி.செல்வ சிங், மாவட்டச் செயலாளர் கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), எல்.சுந்தரராஜன் (வட சென்னை) மாநிலக்குழு உறுப்பினர்கள் எம்.ராம கிருஷ்ணன், ஐ.ஆறுமுக நயினார், கே.சுவாமிநாதன், வே.ராஜசேகரன், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.அர விந்த்சாமி, அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செய லாளர் எஸ்.சிவக்குமார், சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர் சங்க தலைவர் டி.அனந்தன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அன்னாரது உடல் தனியார் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.