சென்னை, ஜூலை 5 -
தரமணி பள்ளி மாணவர்களுக்கு தற்காலிக வகுப்பறைகளை ஏற்படுத்தி கற்பிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி யில் ‘மக்களைத் தேடி மேயர்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி புதனன்று (ஜூலை 5) அடையாறு (13வது) மண்டல அலுவலகத்தில் மேயர் ஆர்.பிரியா நேரடியாக மக்க ளிடம் மனுக்களை பெற்றார். இந்த நிகழ்வில் 303 கோரிக்கை மனுக்களை பெற்று, உடனடியாக 14 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.
தரமணி பள்ளி
இந்த நிகழ்வில் மேயர் ஆர்.பிரியாவிடம் மனு அளித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, தரமணி மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்படுகிறது. இதனால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்பு நடத்தப்படுகிறது.
இதன் காரணமாக பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்துள் ளது. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளே தொடங்கப்படவில்லை. எனவே, பள்ளிக்கு அருகாமையில் உள்ள அரசு கட்டிடங்களில் தற்காலிக வகுப்பறைகளை திறந்து மாணவர் களுக்கு வகுப்புகளை நடத்த வேண்டும் என்றார். இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க துணை ஆணையர் சரண்யா அரிக்கு ஆணையர் ஜெ.ராத கிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
கழிவுநீர்
வேளச்சேரி பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி, பகுதிக்குழு உறுப்பினர்கள் குமரேசன், ராம மூர்த்தி, ராஜேந்திரன், மாதர் சங்க பகுதிச் செயலாளர் சித்திரை செல்வி, சத்யா உள்ளிட்டோர் மனுக்களை அளித்தனர். அதில், 10 வருடமாக போடாமல் உள்ள உட்புறச் சாலை களை செப்பனிட வேண்டும். தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை புதைவட மாக மாற்ற வேண்டும். அறிவிக்கப் படாத மின் வெட்டை சரி செய்ய வேண்டும். கழிவுநீர் சாலைகளில் ஆங்காங்கே வழிந்தோடும் நிலை உள்ளது. ஒரு சில இடங்களில் குடி நீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. இதன் மீது புகார் செய்தும் அதிகாரி கள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். மக்களின் இன்னல்களை சரிசெய்ய வேண்டும்.
மருத்துவமனை
வேளச்சேரி சேவா நகரில் உள்ள தாய் சேய் நல மருத்துவ மனை புறநோயாளிகள் மருத்துவ மனையாக மாற்றப்பட்டது. அதனை ரத்து செய்து மீண்டும் மகப்பேறு மருத்துவமனையாக செயல்பட வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி னர். இந்த புகார்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க மேயர் உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர், மழைநீர் வடிகால் பணி களை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியிருப் பதாகவும், குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியம் தொடர்பாக பல்வேறு புகார்கள் பெறப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்ட இடங்களில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். இந்நிகழ்வில் தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., த.வேலு எம்எல்ஏ, துணை மேயர் மு.மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மண்டலக்குழுத் தலைவர் ஆர்.துரைராஜ் உள்ளிட்டு பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.