சென்னை, அக். 14- தமிழகத்தில் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக 6ஆயிரம் பேர் காத்திருப்பதாக மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். சென்னை சூளைமேடு சென்னை எம்.ஜி.எம். ஹெல்த்கேரில் வெள்ளியன்று (அக்.14) “ஃபால்ஸ் ஹெர்னியா 2022 ’ என்ற மூன்று நாள் பயிலரங்கை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கி கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் உடல் உறுப்பு தானத்திலும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலும் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இருப்பினும் சிறுநீரக தேவை அதிகரித்துள்ளது. இன்று நமது மாநிலத்தில் 6ஆயிரம் பேருக்கு மாற்று சிறுநீரகம் தேவைப்படுகிறது. முத லமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பல அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யப்படுகின்றன. மாநிலத்தில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதி கரித்துள்ளது. மாநிலத்தில் 10முதல் 11 மருத்துவமனைகளில் மட்டுமே உடல் உறுப்பு கள் பெறுவதற்கு உரிய உரிமம் (ஆர்கன் ஹார் வஸ்ட் லைசன்ஸ்) வழங்கப் பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னாள் தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும் இந்த உரிமம் வழங்கப் பட்டுள்ளது. இதனால் மூளைச்சாவு அடையும் நபர்களின் உறுப்புகள் விரைந்து மற்றவர்களுக்கு கிடைக்க வழி செய்யப் பட்டுள்ளது.
உடல் உறுப்புகள் கிடைத்தாலும் அவை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் வரை பாதுகாப்பாக வைப்பதற்கு தேவையான சாதனங்களை நிறுவு வதிலும் மாநில அரசு கவனம் செலுத்தி வரு கிறது. ரூ.34 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் ஒமந்தூரர் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி கேன்சர் ரோபோட்டிக் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. பல மருத்துவமனைகளில் ரூ.12கோடி ரூ.15கோடி என்ற விலையில் வாங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் உலகத்தில் அதி நவீன தொழில்நுட்பத்தி லான சாதனம் இதுவாகும். நாட்டிலேயே ஒரு அரசு மருத்துவமனையில் இத்தகைய சாதனம் பொருத்தப்பட்டிருப்பது தமிழகத்தில் தான். இது போன்ற சாதனங்கள் புதுடில்லி எய்ம்ஸ் போன்ற ஒன்றிய அரசின் மருத்துவ மனைகளில் மட்டும்தான் இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார். இந்த நிகழ்ச்சியில், எம்.ஜி.எம்.ஹெல்த்கேர் இயக்குநர் டாக்டர் பிரஷாந்த் ராஜகோபாலன், ஐ.ஏ.ஜி.இ.எஸ். தலைவர் டாக்டர் எல்.பி.தங்கவேலு, மினிமல் அக்சஸ் (ஜி.ஐ.) மற்றும் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை பிரிவின் மூத்த ஆலோசகர் டாக்டர் தீபக் சுப்பிரமணியன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.