districts

img

இரும்புலிசேரி செல்ல பாலாற்றின் குறுக்கே மேம்பாலம்

செங்கல்பட்டு,மே 20-  திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூரிலிருந்து இரும்புலிச்சேரி கிராமத் திற்குச் செல்ல பாலாற்றின் குறுக்கே ரூ. 40.33 கோடி யில் மேம்பாலம் கட்டும்  பணிகள் தொடங்கப்பட்டுள் ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் நெரும்பூர் கிராமத்தில் இருந்து இரும்புலிச்சேரி, எடையாத்தூர் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் வகையில், பாலாற்றின் குறுக்கே கடந்த காலங்க ளில் தரைப்பாலம் அமைந் திருந்தது. இந்த தரை பாலத்தின் மூலம் இரும்புலி சேரி எடையாத்தூர் கிராம  மக்கள் மற்றும் பள்ளி,  கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் திருக்கழுக் குன்றம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர பயன்படுத்தினர். இந்நிலையில், கடந்த  2015ம் ஆண்டு பெய்த பெரு மழையில் பாலாற்றில்  ஏற்பட்ட வெள்ளப்பெருக் கில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், நெரும்பூர்,  இரும்புலிச்சேரி கிராம மக்களின் வசிப்பிடம் தீவு போல் மாறின. இந்நிலையில் படகுகள்  மூலம் அப்பகுதி மக்களுக்கு  நிவாரண பொருட்கள் கொண்டு சென்று வழங்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆற்றின் குறுக்கே தற்காலிக தரைப்பாலம் அமைக்கப் பட்டது. ஆனால் பாலம் மீண்டும் வெள்ளத்தில் சேத மடைந்தது.  இந்த கிராம  மக்கள் பாலாற்றில் வெள்ளம் ஏற்படும்போ தெல்லாம் நகரப் பகுதிக்கு  வந்து செல்ல முடியாமல்  தொடர்ந்து பாதிக்கப்பட்ட னர். இந்நிலையில், இரும் புலிச்சேரி நெரும்பூர் இடையே உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்று  தமிழக அரசு கடந்த 2017ம்  ஆண்டு அறிவித்தது. மேலும், மண் பரிசோதனை கள் நடைபெற்றது. எனினும், உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், பாலாற் றின் குறுக்கே உயர்மட்ட  மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ரூ.40.33 கோடி  நிதி ஒதுக்கியது. இதன் பேரில், பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை, வரும் 2026 ஜனவரி மாதத்தில் பணிகளை முடிக்க  வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.