districts

img

புயல் எதிரொலி: மீனவர்கள் படகு, வலைகளை பாதுகாக்க நடவடிக்கை

கடலூர், டிச.3- புயல் எதிரொலியாக கடலூர் மாவட்ட மீனவர்கள் படகுகள், மீன்பிடி வலைகளை பாதுகாப்பாக எடுத்து வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தாழங்குடா, தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு உட்பட மாவட்டத்தின் கரையோரங்களில் உள்ள  பல்வேறு மீனவ கிராமங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பைபர் படகுகள், வலைகள் கட்டு மரங்கள்  உள்ளிட்ட உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள மீன்வளத்துறையினர் அறிவுறுத்தினர். இதனை அடுத்து கடலூர் தாழங்குடா மீனவர் கிராமத்தில் பைபர் படகுகளை டிராக்டர் மூலம் கட்டி மேடான பகுதிக்கு கொண்டு செல்லும் பணியில்ஈடுபட்டனர். மேலும் மீன் பிடி வலைகளையும் மீனவர்கள் கரை பகுதியிலிருந்து அப்புறப்படுத்தி மேடான பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் பணியில்ஈடுபட்டுள்ளனர்.