விவசாய விளை நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கோபுரத்தால் பாதித்துள்ள ராணிப்பேட்டை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி 6வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கே. நேரு கலந்துகொண்டார். ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் எல்.சி. மணி, தலைவர் எஸ்.கிட்டு, பொருளாளர் ஊ.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். போராட்டகளத்திற்கு வருகை தந்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து, ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற விவசாயிகள் அங்கு காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.