districts

img

வறட்சியில் வாடிய கரும்பு பயிர்: கவலையில் விவசாயிகள்

கள்ளக்குறிச்சி, மே 19 - கள்ளக்குறிச்சி மாவட் டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜோதி  இவருக்கு  சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு வந்துள்ளார்.  இந்த நிலையில் இந்த ஆண்டு ஏற்பட்டகடுமை யான வறட்சி மற்றும் பருவ மழைப்பொழிவு போதிய அளவு இல்லாததால்  நிலத் தடி நீர்மட்டம் குறைந்து கிணற்றில் நீர் வற்றி உள்ளது இதனால் கரும்பு பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச  முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். பயிரிடப்பட்ட சுமார் ஐந்து ஏக்கர் கரும்பு  பயிர் காய்ந்து கருகி  உள்ளது ஒரு ஏக்கருக்கு  30,000 வரை செலவிடப் பட்டுள்ள நிலையில் விவசாயி என்ன செய்வது என்று தெரியாமல் கவலை அடைந்துள்ளார்.  மேலும் பாதிக்கப்பட்ட கரும்பு பயிர்களை வேளாண்மை துறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்தும் இதுனால் வரை கருகியகரும்பு பயிர் களை பார்வையிட வர வில்லை என குற்றம் சாட்டிய  இவர் தொடர்ந்து கடன் வாங்கி கரும்பு பயிரிட்டு வறட்சியால் கருகிய கரும்பு பயிரை வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய இழப்பீடு தொகை வழங்க  வேண்டும் என விவசாயி கண்ணீர் மல்க தெரிவித் துள்ளார்.   மேலும் நன்னாரம் பகுதி யில் சோளம் எள்ளு போன்ற  பயிர்கள் கடும் வறட்சியால் காய்ந்து உள்ளதை இதனை  மாவட்ட நிர்வாகம் வேளாண் துறையும் பார்வையிட்டு பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்கு ஏதேனும் இழப்பீட்டுத் தொகையினை வழங்கினால் மட்டுமே  தொடர்ந்து எங்களால் விவசாயத்தில் ஈடுபட முடியும் என வருத்தத்தோடு அவர் தெரிவித்தார்.  இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள ஏரி குளங்கள் கண்மாய்கள் முறையாக தூர் வாரப்படா தால் ஏரியில் தண்ணீர் குறைந்தது. இதனால் நிலத் தடி நீர் மட்டம் குறைந்து கிணறு வற்றி உள்ளதாக கூறிய அவர் அருகில் உள்ள ஏரிகளை தூர்வாரி னால் இந்த ஆண்டு பருவ  மழையின் போது அதிகள வில் தண்ணீரை சேமித்து வைக்கமுடியும் என்றார். நீர்வரத்து வாய்க்கால்களை சரி செய்தும் தூர்வாரினால் கிணறுகளில் நீர்மட்டம் உயரும். விவசாயத்திற்கும் ஓரளவுக்கு தண்ணீர் கிடைக்கும் என்று அவர் கூறினார்.

;