districts

விவசாயி தற்கொலை முயற்சி

விழுப்புரம், ஜூலை 3-

    விழுப்புரம்  மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட அகரம் கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் (70) தனது நிலத்தை அளப்பதற்கு வருவாய் துறையில் நில அளவை (சர்வே) பிரிவில் மனு கொடுத்தும் இதுவரைக்கும் அளந்து கொடுக்காமல் அலைக்கழிப்பு செய்து வந்துள்ளனர்.

    இதனால் மனமுடைந்த விவசாயி ஆட்சியர் அலுவலகம் வந்த ராமகிருஷ்ணன் திடீரென தனது கை பையில் மறைத்து வைத்திருந்த வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இவரை காவலர்கள் காப்பாற்றினர்.