திருவள்ளூர்,ஆக.26-
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரம் சின்னத்தெருவை சேர்ந்தவர் அருள்ஜோதி (51). இவர் பேரம்பாக்கம் துணை மின் நிலையத்தில் வயர் மேன்னாக பணிபுரிந்து வருந்தார். கடந்த சில தினங்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் வெள்ளியன்று பேரம்பாக்கம் அருகே உள்ள கொண்டஞ்சேரி, மேட்டு கண்டிகை திடீர் நகர் பகுதியில் டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது. பழுதை சரி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் டிரான்ஸ்பார்மரில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் உயிரிழந்தார்.