districts

img

தனியார் துறையில் 5 விழுக்காடு இட ஒதுக்கீடு- மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்

செங்கல்பட்டு, டிச.24- தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைக ளுக்கான சங்கம் வலியுறுத்தி யுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட  மாற்றுத்திறனாளிக ளுக்கான மாவட்ட அளவி லான ஒருங்கிணைப்பு குழு  கூட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பணியமர்த் தும் தனியார் நிறுவனங்க ளுக்கு ஊக்கத் தொகை சம வாய்ப்பு கொள்கை தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது ) செல்வம் தலைமையில் வெள்ளியன்று (டிச 24)  மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ப.பாரதி அண்ணா, பேசுகையில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கான தொழி லாளர் நல அலுவல கத்தை துவக்க வேண்டும், வங்கிகளில் மாற்றுத்திறனா ளிகளுக்கு பிணையம் கேட் பதை கைவிட வேண்டும், அரசு ஈ சேவை மையத்தில் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்காமல் நேரடி யாக செல்லும் வகையில் அறிவிப்பு பலகை செய்திட வேண்டும், மாடியில் உள்ள அரசு அலுவலகங்களில் காலை 11 மணி முதல் 12 மணி வரை அலுவலர்கள் தரை தளத்திற்கு வந்து மாற்றுத்தி திறனாளிகளிடம் மனுக்களை பெற வேண்டும் என வலியுறுத்தினார். மாற்றுத்திறனாளி களுக்கு தனித்துவம் வாய்ந்த  அடையாள அட்டை வழங்கு தல், மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கப்படும் பாதுகாப்பு நியமன சான்று வழங்குதல், மாற்றுத்தி றனாளி களுக்கான மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரு மாதங்களுக்கு ஒரு முறை  மாவட்ட அளவிலும், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாதத்திற்கு ஒருமுறை வட்ட அளவில் சிறப்பு மனுநீதி நாள் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர் சுட்டிக்காட்டினார். மாவட்ட செயலாளர் வி.அரிகிருஷ்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் செந்தில்குமாரி, தனி திட்ட துணை ஆட்சியர் ஜெயதீபன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

;