சென்னை, ஆக. 2-
ரெட்டேரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி மண்டலம் 3க்கு உட்பட்டு ரெட்டேரி (இரட்டை ஏரி) உள்ளது. 5.42 மில்லியன் சதுர அடி பரப்பளவு கொண் டது இந்த ஏரி. இந்த ஏரிக்கு அம்பத்தூர் கொரட்டூர் ஏரி, செங்குன்றம் நீர்த்தேக்கத் தில் இருந்து உபரி நீர் வருகிறது.
ரெட்டேரியை சுற்றி சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அந்த பகுதி மக்களின் குடிநீர் ஆதார மாக விளங்கிய அந்த ஏரி யின் பெரும்பகுதி ஆக்கிர மிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரியின் அரு காமையில் உள்ள கழிவு நீர் ஏரிக்கு செல்லும் கால்வாயில் விடப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக கதிர்வேடு அருகே ஏரிக்கு செல்லும் கால்வாயில் தொழிற்சாலை களில் இருந்து வெளியே றும் எண்ணெய் கழிவு கலக்கிறது. கால்வாய் முழு வதும் ஆகாயத் தாமரை செடிகளும், குப்பைக் கழிவுகள் காட்சியளிக் கின்றன. ஆனால் இதில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
இந்த ஏரியில் மீன் பிடித்து விற்பனை செய்யப் படுவதால், அதை வாங்கி உண்பவர்களுக்கு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. சில நேரங்களில் மீன்கள் செத்து மிதப்பதும் உண்டு. எனவே சென்னை மாநக ராட்சி நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரட்டூரில் இருந்து ஏரிக்கு செல்லும் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண் டும். ஆகாயத்தாமரை செடி களை அகற்றி, குப்பைக் கழிவுகளை அப்புறப் படுத்த வேண்டும். வருங் காலங்களில் குப்பைக் கழிவுகளை கொட்டுபவர் கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.