சென்னை, மார்ச் 8- சென்னையில் குடிநீர், கழிவுநீர் கட்டணம் செலுத்தும் அட்டைமுறை ஏப்ரல்1 முதல் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது:- சென்னை குடிநீர் வாரியத்தின் நுகர்வோர்கள் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்து வதை டிஜிட்டல் கட்டண முறையில் ஊக்கு விக்கும் முறையில் வரிசையில் காத்திருக் கும் நேரத்தை தவிர்க்கவும் மற்றும் காகித பயன்பாட்டை குறைக்கவும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் நுகர்வோர் அட்டை வழங்கப்பட மாட்டாது. நுகர்வோர்களுக்கு 5 வருடங்களுக்கு ஒருமுறை நுகர்வோர் அட்டை சென்னை குடிநீர் வாரியத்தால் வழங்கப்படுகிறது. தற்போது 2020-ம் ஆண்டில் 2020-21 முதல் 2024-25 வரையிலான கால கட்டத்திற்கு அனைத்து நுகர்வோர்களுக்கும் நுகர்வோர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம், குடிநீர் மற்றும் கழிவு நீர கற்று வரி, குடிநீர் கட்டணங்களை வசூலிக்கும் முறையினை நவீன இணைய அமைப்பிற்கேற்ப மேம்படுத்தி உள்ளது. இந்த இணைய வழியிலான கட்டண நுழை வாயிலைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூல மாக செலுத்தலாம். மேலும் யு.பி.ஐ. கியூஆர் குறியீடு மற்றும் பி.ஏ.எஸ். போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங் களை செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்த இணைய வசதி மூலம் நுகர்வோர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை தெரிந்து கொள்ளவும் பணம் செலுத்தும் ரசீதினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இயலும். மேலும் வசூல் மையத்தில் பணம் செலுத்தும் போது அளிக்கப்படும் கணினி ரசீது பணம் செலுத்தியதற்கான பதிவாக கருதப்படும். ஏற்கனவே உள்ள நுகர்வோர் அட்டையிலும் பணம் செலுத்தப்பட்டதற்காக எந்த பதிவும் செய்யப்படமாட்டாது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.