districts

விளையாட்டு வீராங்கனைகளுக்கு டிஆர்இயூ பாராட்டு விழா

சென்னை, ஜூலை 2-

    ஒர்க்ஷாப் டிவிஷன் முன்னாள் கூடுதல் டிவிஷன் செயலாளர் மறைந்த அரியின் பேத்தியும், கேரேஜ் சி.ஆர். கிளைச் செய லாளர் எச்.ரஜினி மகளுமான ஆர்.தமிழினி தேசிய அளவில் நடைபெற்ற யோகா ஒலிம்பியாட் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    டிஆர்இயூ உதவி பொதுச்செயலாளர் ஆர்.சரவணன் சி. மகள் எஸ்.ஜெனிபர் தைவான் நாட்டில் நடந்து முடிந்த ‘யூ15 மகளிர் சாஃப்ட் பால்’ போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்று பெருமை சேர்த்துள்ளார். சாதனை படைத்த இருவ ருக்கும் டிஆர்இயூ ஒர்க்ஷஷாப் டிவிஷன் சார்பில் பாராட்டு விழா ஞாயிறன்று (ஜூலை 2) சென்னையில் நடைபெற்றது.

   நிகழ்ச்சிக்கு  அருண் குமார் தலைமை தாங்கினார். செயல் தலைவர் அ.ஜானகி ராமன், உதவித் தலைவர்  சிவக்குமார், உதவி பொதுச்செயலாளர் செந்தில் குமார், டிவிஷன் பொருளாளர் யதுகிரி, பி.எஸ்.உமாபதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.