districts

களம் 16 நிகழ்வுகள்

திருவண்ணாமலை,டிச.13- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பெரணமல்லூர் கிளை சார்பாக களம் 16 நிகழ்வுகள் கிளை தலைவர் த.ஞானசேகர் தலைமையில் நடைபெற்றது. கிளை செயலாளர் மா. கௌதமமுத்து வரவேற்றார். மகாகவி பாரதியார் குறித்த பாடல்கள் மற்றும் பேச்சு நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாலவன், கவிஞர்கள் நா.முத்துவேலன், செங்கொடி, துணைத்தலைவர் இரா. ராஜசேகரன், அறிவொளி ஜெய ராமன், இல்லம் தேடிக் கல்வித்திட்ட பழனி, எழுத்தா ளர் பெரணமல்லூர் சேகரன் ஆகி யோர் பாரதி குறித்துப் பேசினார். இந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. பொருளாளர் ப.தேவதாஸ் நன்றி கூறினார்.

;