சென்னை, ஜூலை 19 -
பக்கிங்காம் கால்வாய் பணிகளுக்காக, குடியிருப்பு களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திருவல்லிக் கேணி சட்டமன்ற உறுப்பி னர் அலுவலகத்தில் மக்கள் மனு அளித்தனர்.
பக்கிங்காம் கால்வாயை மேம்படுத்துவதற்கான திட்டத்தை செயல்படுத்து வதற்காக சுவாமி சிவானந்தா சாலை முதல் டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை வரை சுமார் 2.7 கி. மீ தொலைவில் உள்ள 5 ஆயிரம் குடும் பங்கள் வெளியேற்றப்பட உள்ளதாகவும், முதற்கட்ட மாக 1200 குடும்பங்கள் வெளியேற்ற திட்டமிடப் பட்டுள்ளதாகவும் தெரிகி றது.
இந்நிலையில், கால்வாய் கரையோரம் பல ஆண்டுகளாக உள்ள குடியிருப்புகளை அகற்ற, அங்க அடையாளங்களை (பயோமெட்ரிக் சர்வே) சேகரிக்கும் பணியை அதி காரிகள் தொடங்கி உள்ள னர். இதற்கு எதிர்ப்பு தெரி வித்து மார்க்சிஸ்ட் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், சட்ட மன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினிடம் மனு கொடுக் கும் இயக்கத்தை மார்க் சிஸ்ட் கட்சி அறிவித்தது. அதன்படி, சட்டமன்ற உறுப் பினர்கள் அலுவலகத்தில் புதனன்று (ஜூலை 19) நூற்றுக்கணக்கானோர் தனித்தனியாக மனு அளித்தனர்.
அப்போது, மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி உதவியாளர், மக்கள் பாதிக்கப்படாமல் அருகாமையிலேயே குடியிருப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சிபிஎம் தலைவர்களோடு அமைச்சர் விரைவில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார். அதுவரை மக்களுக்கு எவ்வித நெருக் கடியும் அதிகாரிகள் தரப்பில் தரக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கட்சி தலை வர்கள் வலியுறுத்தினர்.
கட்சியின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதிக் குழு உறுப்பினர் கபாலி தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில், மத்திய சென்னை மாவட்டச் செயலா ளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் வே. ஆறுமுகம், வி.தனலட்சுமி, பகுதிச் செய லாளர் கவிதா கஜேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மிருதுளா, பகுதிக்குழு உறுப்பினர்கள் ராஜேந்தி ரன், அன்பழகன், வீரபெரு மாள், உஷா, சுரேஷ், கிளைச் செயலாளர் காந்திமதி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் சாந்தி உள்ளிட்டோர் பேசி னர்.