districts

சென்னை முக்கிய செய்திகள்

போதை பொருள் விற்பனையை தடுக்க மாறுவேடத்தில் கண்காணிப்பு

அம்பத்தூர், மே 21- அண்ணாநகர் காவல் மாவட்டம் சார்பில், போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றது.  சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டம் சார்பில், அண்ணா நகர் துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் முகப்பேரில் திருமண மண்டபத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட இளை ஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு போதை பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். இதில் துணை ஆணையர் சீனி வாசன் பேசுகையில், அண்ணாநகர், அரும்பாக்கம், அமைந்தகரை, சூளை மேடு, திருமங்கலம், ஜெ.ஜெ. நகர், நொளம்பூர் பகுதிகளில் கஞ்சா, குட்கா, போதை மாத்திரைகள் விற்பனை செய்வதை தடுக்க சிறப்பு தனிப்படை அமைத்துள்ளோம். அந்த குழுவினர் 24 மணி நேரமும் மாறுவேடத்தில் கண்காணித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி, பூங்காக்கள், பேருந்து நிலையம், ரயில் நிலைய பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சிறப்பு தனிப்படையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருவதால் போதை பொருட்கள் விற்பனை குறைந்துள்ளது. போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், உயிரிழப்பு குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அண்ணா நகர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம், கஞ்சா போதையில் தகராறு செய்பவர்கள், பெண்களை கேலி, கிண்டல் செய்பவர்கள், செயின், செல்போன் பறிப்பு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து காவல்துறை உயரதிகாரிகளிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். உங்கள் பிரச்சனைகளை தீர்க்க காவல்துறையினர் உதவி செய்வார்கள். போதை பொருட்கள் விற்பனை பற்றி தெரிந்ததால் பொது மக்கள் தகவல் அளிக்கலாம். அவர்கள் பெயர் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்று அவர் கூறினார்.

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து மாற்றம்

காஞ்சிபுரம், மே 21- காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள தேவ ராஜ சுவாமி திருக்கோயி லில் வைகாசி பிரம்மோற்ச வத்தை யொட்டி   மே 22 முதல்  ஜூன் 1 ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. கருடசேவை மற்றும் திருத்தேர் செல்லும் சாலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின் ஒயர்களில் மின்விபத்து ஏற்படா வண்ணம் தற்காலிகமாக மின் இணைப்பை துண்டித்தல், மின்கசிவு ஏற்படாவண்ணம் பாது காத்தல் மற்றும் தேருக்கு இடையூராக உள்ள மின்சார ஒயர்களை முறைப்படுத்தும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. போக்குவரத்து மாற்றம் மே 22 கருடசேவை மற்றும் மே 26 திருத்தேர் வீதிஉலா நடைபெறும் நாட்களில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் கீழ்காணும் தற்காலிக பேருந்துநிலையம் வரை வந்துசெல்லும்  என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலிமுகமது பேட்டை தற்காலிக பேருந்து நிறுத்தம்: திருத்தணி, திருப்பதி, அரக்கோணம்,  ஓச்சேரி,  வாலாஜா,  வேலூர், பெங்களூர்  ஆகிய பேருந்துகள் இங்கி ருந்து செல்லும் புதிய ரயில் நிலையம்: சுங்குவார்சத்திரம்,  திருபெரும்புதூர்,  பூந்த மல்லி,  சென்னை ஆகிய ஊர்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் செல்லும். பழைய ரயில் நிலையம்:   தாம்பரம்,  செங்கல்பட்டு,  வாலாஜாபாத் ஆகிய ஊர்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் புறப்படும் ஓரிக்கை -- மிலிட்டரி ரோடு:  உத்திரமேரூர் மற்றும் மதுராந்தகம் ஆகிய ஊர்களுக்கு இங்கிருந்து பேருந்துகள்  புறப்படும்.மாவட்ட ஆட்சியர் அலு வலகம்: வந்தவாசி,  செய்யார்,  சேலம், திருச்சி  திருவண்ணாமலை, விழுப்பு ரம்,  திண்டிவனம், பாண்டிச் சேரி, தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் புறப்படும்.

முந்திரி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கடலூர், மே 21- சுட்டெரிக்கும் வெயிலால் முந்திரி சாகுபடி பாதிக்கப் பட்டதையொட்டி விவசாயிகளுக்கு உரிய நிவாரண வழங்க  வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட குழு கூட்டம் வடலூரில் மாவட்ட தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன்  தலைமையில் நடைபெற்றது. தீர்மானங்கள் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் வட்டங்களில் கடும் வறட்சியின் காரணமாக முந்திரி பூக்கள் காய்ந்து கருகி கொட்டி வருகிறது. எனவே  மாவட்ட நிர்வாகம் தோட்டக்கலைத்துறை மூலம் உடனடியாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட முந்திரி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டத்தில் உள்ள டெல்டா பகுதி விவசாயிகளின் மிக முக்கிய  பாசன ஆதாரமாக இருக்கக்கூடிய வீராணம் ஏரியை விரைந்து தூர்வாரி விவசாயிகளுக்கான பாசன ஆதாரத்தை உறுதிப்படுத்திட வேண்டும்,  சிதம்பரம் சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் வலியுறுத்தப்பட்டது.   கூட்டத்தில் அகில இந்திய இணை செயலாளர் டி.ரவீந்தி ரன், மாவட்ட செயலாளர் ஆர்.கே.சரவணன்,  பொருளாளர் ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சிதம்பரத்தில் அபாய சங்கிலியை இழுத்து ரயில் நிறுத்தம் மாற்றுதிறனாளிகள் ஆவேசம் 

சிதம்பரம், மே 21- சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சோழன் அதிவிரைவு ரயில் சிதம்பரத்தை நோக்கி செவ்வாயன்று மதியம் 11 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது மாற்றுத்திறனாளி அமரும் தனி ரயில் பெட்டியில் பயணிகள் ஏறிக்கொண்டு மாற்றுத்திறனாளிகளிடம் வாக்குவாதத்தில்  ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் பயணிகள் திடீரென ரயிலை நிறுத்தும் அபாய சங்கிலியை இழுத்தனர்.  இதையொட்டி சிதம்பரம் ரயில் நிலையம் அருகே உள்ள கதிர்வேல் நகர் ரயில்வே கேட்டு அருகே ரயில்  நின்றது. இதனால் சக பயணிகளிடையே  பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 20 நிமிடத்திற்கு மேலாக அந்த ரயில் அங்கேயே நின்று கொண்டிருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த ரயில்வே ஓட்டுநர் மற்றும் ரயில்வே கார்டு இருவரும் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி பெட்டிக்கு வந்து சங்கிலி இழுத்ததை சரி செய்தனர். இதனைத் தொடர்ந்து சிதம்பரம் இருப்பு பாதை ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் மாற்றுத்திறனாளி பெட்டியில் இருந்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமையலறை திறப்பு

திருவள்ளூர், மே 21- திருவள்ளூர் மாவட்டம்,  மீஞ்சூர் பேரூராட்சியில் அடங்கிய,  மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில்  சுற்று  வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு வாரம் தோறும்  மருத்துவ பரிசோதனை செய்து அவர்களுக்கு சத்தான உணவு வழங்க ஏற்பாடு  செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமையல் கூடம் பழுதானதால் மதிய உணவு செய்யப்படவில்லை. இது குறித்து மீஞ்சூர் பஜார் வீதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் சிவா விஸ்வநாதன் தகவல் அறிந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமையல்  அறை கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா நடைபெற்றது. இந்த சமையல் கட்டிடத்தை சமூக ஆர்வலர் விஸ்வநாதன் செவ்வாயன்று (மே 21), திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து அவரது சொந்த செலவில் 120 கர்ப்பிணி களுக்கு முட்டை உள்ளிட்ட சத்தான உணவு வழங்கப்பட்டது.   இதில் ஆரம்ப சுகாதார தலைமை மருத்துவர் மகேந்திரன் வர்மன், உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் (சிஐடியு), மாநில  துணைச் செயலாளர்  பி.கதிர்வேல்,  பிரசன்னா,  பாலாஜி,  முரளி உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நெய்வேலியில் இணை சார்பதிவாளர் வீட்டில் ரெய்டு: பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் சிக்கின

கடலூர், மே 21- கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே வடக்குத்து பகுதியில் இணைசார்பதிவாளர் தையல்நாயகி இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். திங்கள் கிழமை விழுப்புரம் பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.8 லட்சம்  பணம் கைப்பற்றப்பட்டது. இது குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை ஒட்டி செவ்வாய் கிழமை கடலூர் மாவட்டம்  நெய்வேலி வடக்குத்து பகுதியில் உள்ள இணை சார்பதிவாளர் தையல்நாயகி வீட்டில் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை முதல் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை மாலை நிறைவடைந் துள்ள நிலையில் ரூ.1.26 கோடி மதிப்பிலான  வைப்புத் தொகை மற்றும் தங்க பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலும் 17 இடங்களில் வீட்டுமனைகள் மற்றும் நிலம் வாங்கியதற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து  ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து இணை சார்பதிவாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீட் அல்லாத படிப்புகளுக்கு  விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

புதுச்சேரி, மே 21- நீட் அல்லாத இளநிலைப் படிப்புகளுக்கு வரும் மே.31 வரையில் இணைய தளம் மூலம் சென்டாக் அமைப்புக்கு விண்ணப்பிக் கலாம் என புதுச்சேரி சென்டாக் கலந்தாய்வு குழு  அறிவித்துள்ளது. மதிப்பெண் அடிப்படை யில், விதிமுறைப்படி கல்லூரிகளில் சேர்வதற் கான, மாணவர்கள் விரும்பும் பாடங்கள்  ஒதுக்கித்தரப்படும். அதன்படிசென்டாக்கிற்கு கடந்த மே.14  முதல் விண்ணப் பித்து வருகின்றனர். கடைசி  தேதி மே 22 என கூறப்பட்டது இந்நிலையில் விண்ணப்ப கால அவகாசத்தை நீடிக்க  கோரிக்கை வைக்கப் பட்டது. இதுகுறித்து புதுச்சேரி  சென்டாக் ஒருங்கிணைப் பாளர் அலுவலகம் சார்பில்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:- விண்ணப்பதாரர்கள் கோரிக்கைகளின்படி இள நிலை நீட் அல்லாத படிப்பு களான பி.டெக், பி.எஸ்.சி.வேளாண்மை, தோட்டக் கலைத்துறை, செவிலியர், பி.ஃபார்ம் போன்ற மருத்துவம் சார்ந்த துணைப் படிப்புகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகள், பி.ஏ.,எல்.எல்.பி போன்ற சட்டப்படிப்புகள் ஆகியவற்றுக்கு விண்ணப் பிக்கும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. ஆகவே, நீட் அல்லாத  இளநிலைப் படிப்பு களுக்கு வரும் 31 ஆம் தேதி  வரையில் இணையதளம் மூலம் சென்டாக் அமைப்புக்கு விண்ணப்பிக் கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.