தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா நடத்தினர். மாவட்டத் தலைவர் அருண்பாட்சா தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சு. பார்த்திபன் துவக்க உரையாற்றினார். ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் சி. சுப்பிரமணியன் நிறைவுறையாற்றினார்.