districts

img

தேர்தல்கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தேர்தல்கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் செவ்வாயன்று (ஜூலை 11) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக சென்னை மாநகராட்சி வளாகத்தில் வடசென்னை மாவட்டத் தலைவர் வே.விஜயகுமரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாநில பொதுச்செயலாளர் அண்ணா குபேரன், மாவட்டச் செயலாளர் ம.அந்தோணிசாமி, பொருளாளர் ஏழுமலை, இணைச்செயலாளர் வி.சிவக்குமார், பகுதிச்செயலாளர் ரவி, செங்கொடி சங்கத்தின் தலைவர் பட்டாபி, பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசலு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.