districts

img

வில்லிவாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்

தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை வரையறையின்றி உயர்த்தும் தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தத்தை கண்டித்து சனிக்கிழமைன்று (ஏப்.22) வில்லிவாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் வில்லிவாக்கம் பகுதிச் செயலாளர் ஜி.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், மாவட்டகுழு உறுப்பினர் எம்.ஆர்.மதியழகன், ஆ. பிரியதர்ஷினி எம்.சி., உள்ளிட்டோர் பேசினர்.