தென்காசி ,செப். 26 கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரயில்களை உடனே இயக்க வேண்டும். மற்றும் கொரோ னா காலத்தில் எக்ஸ்பிரஸ் என்று உயர்த்தப்பட்ட ரயில் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். விஸ்வநாதபுரம் ரயில்வே கேட்டில் மேம்பா லம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செங் கோட்டை விஸ்வநாதபுரம் கிளை சார்பில் கிளைச் செயலாளர்முகமது காசிம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை தாலுகா செயலாளர் வேல் மயில் துவக்கி வைத்து பேசி னார். மாவட்டக் குழு உறுப்பி னர் பால்ராஜ் நிறைவு செய்து பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் இடைக்கமிட்டி உறுப்பி னர்கள் மற்றும் கிளைச் செய லாளர் மைதீன், தமிழ்நாடு விவசாய சங்க தாலுகா செய லாளர் சிவகுமார் மேலூர் கிளை ராஜகோபால் உள் ளிட்டோர் வாழ்த்தி பேசினர். சிவன் நன்றி கூறினார்.